தஞ்சாவூர் மாவட்ட வேதியியல் குடும்ப சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.
புதிய கல்வியாண்டில் நமது மாணவச் செல்வங்கள் அனைவரும் வெற்றி பெற அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் ஆசிரியப் பெருமக்களும் கடும் உழைப்பினை நல்குவோம். நமது தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ஜூன் மாதத்தில் அறிவித்தபடி மீண்டும் இடைத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்ப வாராந்திர பாடத்திட்டம் 2013-14ல் உள்ளவாறு மாற்றப்பட்டுள்ளது. அதனை பின்பற்றிட வேதியியல் குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.