Saturday, August 2, 2014

தஞ்சாவூர் மாவட்ட வேதியியல் ஆசிரியர்களுக்கான ஒரு புதிய வலைப்பூ இன்று முதல் மலர்கிறது.

கரந்தை சரவணன் விடுக்கும் வேண்டுகோள்;
                        அன்பும்   அறிவும்  கருணையும்   நிறைந்த    தஞ்சாவூர் மாவட்ட மேல்நிலைப்  பள்ளிகளில்   பணியாற்றும்   வேதியியல்    ஆசிரிய சகோதர, சகோதரிகள்   அனைவருக்கும்   நம்  வேதியியல் குடும்பத்தின் சார்பில் என் வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வேதியியல் குடும்பத்து  உறவினர்கள்  பலர்   நடைமுறையில்    ஏற்படும்    சிக்கல்கள்            [ வேதியியல் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் சில சந்தேகங்கள்]  பற்றி தொலைபேசி வழியாக வினவும் பொழுது வகுப்பறைப்  பணியில் ஈடுப்பட்டிருக்கும் சூழலில் முழுமையாகதெளிவுப்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற இடர்பாடுகளை நீக்குவதற்காக நமது குடும்பத்து மூத்த சகோதரர் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு.பால.செங்குட்டுவன் அவர்களின் தலைமையில் நமது சகோதர ஆசிரியர்களின் ஆலோசனை நடைப்பெற்று அதன் முடிவாக நம் குடும்பத்தின் சார்பாக ஒரு அமைப்பினை    இணையத்தில்   ஏற்படுத்தி   அதன்   மூலமாக வேதியியல் பாட  செய்திகளை     பகிர்ந்து     கொள்ளவும்     நம்    குடும்பத்து உறுப்பினர்களின் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை    உயர்த்த உதவும்  புதிய அணுகுமுறைகள், யோசனைகள் போன்றவற்றை     அனைவருக்கும் அறியும்       வண்ணம்      பரவலாக்கவும்      செய்ய            வேண்டும்         என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இந்த வலைப்பூ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பூ பக்கம் ஒரு புதிய முயற்சியாக எனக்கு இருப்பதால் தவறுகள்    ஏதேனும்    ஏற்பட்டால்    பொறுத்துக்   கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த வலைப்பூ விரிந்து நல்வாசம் வழங்க வேண்டுமெனில் நம் உறுப்பினர்கள் அனைவரும் இந்த    வலைப்பூ பக்கத்தை பார்வையிடவும் ஆலோசனை வழங்கவும் பாசத்துடன் வேண்டிக் கொள்கிறேன்.
                    இன்றைய உலகம் இணைய உலகமாக இருப்பதால் [அவனின்றி இவ்வுலகம் அசையாது என்பது போல, இணையமின்றி இவ்வுலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது]  நம் குடும்பத்து உறுப்பினர்கள் எவரேனும் கணினி அறிவு பெறாமல் இருந்தால் உடனடியாக அவ்வறிவு பெற முயற்சி எடுக்குமாறு அவர்களை வேண்டுகிறேன். நன்றி.